உக்ரேன் தொடர்பில் புட்டின் விடுத்துள்ள அறிவிப்பு

உக்ரேனின் ஷெபோரீஷியா மற்றும் கேர்சன் ஆகிய பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆணைப் பிறப்பித்துள்ளார். அத்துடன், இன்றைய தினம் கிழக்கு உக்ரேனின் நான்கு பகுதிகள் சர்வசன வாக்கெடுப்பின் பின்னர் ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.