உங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுவேன்.

இதையொட்டி அவர்களிடம் பிரியங்கா காந்தி கூறியதாவது:-

தேயிலை தொழிலாளர்களும், அவர்களது வாழ்க்கையும் எளிமைக்கும், உண்மைக்கும் உதாரணம். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அசாம் மற்றும் நாட்டின் சொத்துகள். காங்கிரஸ் கட்சி எப்போதுமே உங்களைக் காக்கவும், மேம்படுத்தவும் போராடும்.

இரண்டாவது நாளான நேற்று பிரியங்கா, அப்பர் அசாம் பகுதியில் பிஸ்வநாத் சாரியாலி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவர் தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்களுடன் தானும் ஒரு தொழிலாளியாக மாறி தேயிலை பறித்தார்.

அந்த தொழிலாளர்களிடம் காங்கிரசுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரது எளிமை, வாக்காளர்களை கவர்ந்தது.இவ்வாறு அவர் கூறினார்.