ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி கைதியை சட்டவிரோதமாக விடுதலை செய்தார் என்ற குற்றஞ்சாட்டின் கீழ் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் ஜூலை 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் புதன்கிழமை (25) பிறப்பிக்கப்பட்டுள்ளது.