எதியோப்பிய திக்ரேயில் மோதல்கள்

எதியோப்பியாவின் திக்ரேயின் பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள், களவு, மோதல்கள் நேற்று தொடருவதாக திக்ரே மக்களின் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த முன்னணியின் தலைவர்களைக் கைப்பற்றுவதற்கு சில நாள்களே உள்ளதாக எதியோப்பிய அரசாங்கப் படைகள் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்தே மேற்குறித்த கருத்தை முன்னணி வெளிப்படுத்தியுள்ளது.