ஏழாண்டுகளில் முதற் தடவையாக சீனா செல்லவுள்ள மோடி

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கால் நடாத்தப்படவுள்ள ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இம்மாத இறுதியில் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செல்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக 2018ஆம் ஆண்டு ஜூனிலேயே சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.