ஐக்கிய அமெரிக்காவால் பயங்கரவாதக் குழுவாக புரட்சிகர காவலர்கள்

அந்தவகையில், இன்னொரு நாட்டின் இராணுவத்தை உத்தியோகபூர்வமாக பயங்கரவாதக் குழுவாக ஐக்கிய அமெரிக்கா அடையாளப்படுத்துவது இதுவே முதற்றடவையாகும்.

இந்நிலையில், குறித்த நகர்வுக்கான பதிலளிப்பாக, பயங்கரவாதத்து ஆதரவளிக்கும் அரசாக ஐக்கிய அமெரிக்காவை உடனடியாக பிரகடனப்படுத்தியிருந்த ஈரான், தமது பிராந்தியத்திலுள்ள ஐக்கிய அமெரிக்க படைகளை பயங்கரவாதக் குழுக்களாகவும் பிரகடனப்படுத்தியதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, தமது பிராந்திய செல்வாக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு எதிரான மோதலில் வெற்றியாலேயே சட்டரீதியற்ற குறித்த ஐக்கிய அமெரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் விமர்சித்துள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானிய உயர் புரட்சிகர காவலர் படைகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளவர்களை ஏற்கெனவே கறுப்புப் பட்டியலில் ஐக்கிய அமெரிக்கா சேர்த்துள்ளபோதும், ஈரானிய உயர் புரட்சிகர காவலர் படைகளை முழுமையாக முன்னர் தடை செய்திருக்கவில்லை.

அந்தவகையில், ஈரானிய உயர் புரட்சிகர காவலர் படைகளை பயங்கரவாதக் குழுவாக அடையாளப்படுத்தும் முன்னைய அறிக்கைகளை உறுதிப்படுத்தியிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மீதான நிதியளித்தத்தை ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் அதிகரிக்கும் எனவும், பயங்கரவாத நடவடிக்கைக்கான ஈரானின் ஆதரவுக்கான செலவையும் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.

இதுதவிர, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அரசாக மட்டும் ஈரானில்லாமல், ஈரானின் உயர் புரட்சிகர காவலர் படைகள் பயங்கரவாதத்தில் பங்கேற்பதாகவும் நிதியளிப்பதாகவும், முன்னெடுப்பதாகவும் அறிக்கையொன்றில் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரானிய உயர் புரட்சிகரக் காவலர் படைகளை பயங்கரவாதக் குழுவாக நடைமுறைப்படுத்துவது ஒரு வாரத்தில் இடம்பெறும் என ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், குறித்த நடைமுறைப்படுத்துதலில் இருந்து விலக்குகளிப்புகள் வழங்காவிட்டால், ஈரானிய உயர் புரட்சிகர காவலர் அதிகாரிகளுடன் தொடர்பாடும் ஈராக்கிய அல்லது லெபனானிய அதிகாரிளுடன் ஐக்கிய அமெரிக்க படைகள், இராஜதந்திரிகள் தொடர்பு கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது