சுன்னாகம் பகுதியில் 5 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.