ஐ.தே.கவில் இருந்து மூவர் வெளியேற்றம்?

2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்த போதும் அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கவில்லை.

அண்மையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் கட்சியின் தலைவராக, ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கட்சியில் புதிய பதவிகள் வழங்கும் விடயத்தில் தான்தோன்றித்தனமாக முடிவு எடுத்துள்ளதாக, கட்சியிலுள்ள சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

விரைவில் இவர்கள் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொள்வர் என்றும் கூறப்படுகின்றது.