ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தலதா அதுகோரல மற்றும் ஜனாதிபதி வழக்கறிஞர் ரோலண்ட் பெரேரா ஆகியோர் இந்த மூன்று பேர் கொண்ட குழுவில் இடம்பெறுவார்கள்.
இலங்கையின் ஜனநாயக பல கட்சி முறையைப் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடையில் கொண்டுவருவதற்கான தனது நிலைப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது.