ஓமந்தையில் ஆர்ப்பாட்டம்

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், 8 வருடங்களுக்கு முன்னர், வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்ற 800க்கும் அதிகமானோருக்கு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு, குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் இந்நிலையில், தற்போது வரையில் அக்குடியிருப்பு பகுதியில் 87 குடும்பங்களே வசித்து வருவதாகவும் கூறினர்.

ஏனைய பகுதிகள் பற்றைக்காடுகளாகவும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாகவும் காணப்படுவதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலான நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், குறித்த குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லையெனவும் குற்றஞ்சாட்டினர்.

எனவே தமது காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்க வேண்டுமெனவும் குடியிருக்காதவர்களின் காணிகளைச் சுவீகரித்து, காணியற்றவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும், அவர்கள் வலியுறுத்தினர்.