கடலில் போராட்டத்தில் குதித்த மீனவர்கள்

வடமராட்சி மீனவர்கள், தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு  மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.