கட்டுநாயக்க-கொழும்புக்கு இடையில் சீ-பிளேன் சேவை பேர ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.