கத்திகுத்தில் இரு பொலிஸார் படுகாயம்: 3 பேர் கைது: 3 பேர் தப்பியோட்டம்

பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டதில், இரண்டு பொலிஸார் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டதுடன் மூவர் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம், மட்டக்களப்பு சின்ன ஊறணியில் இடம்பெற்றுள்ளது.