இன்று கனகராயன் குளத்தின் குளக்கட்டின் நடுப்பகுதியில் உம்மை ஒன்று உருவாகி சடுதியாக நீர் வெளியேறத் தொடங்கியது. குளம் உடைப்பெடுக்கும் ஆபாய கட்டத்தை நெருங்கியிருந்ததை இன்று (29/11/2025) காலை ஆறு மணி அளவில் நீரப்பசன திணைக்ககள ஊழியரான திரு பிரவீன் இனங்காண்டு அடுத்து தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் உடண்டியாக அவசர உதவிக்கு ஊரவரை அழைத்துவரும்படி என்னிடம் கூறியதையடுத்து நான் நேரடியாக வீடு வீடாகச் சென்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தேன்.