கனடா அஞ்சல் தலையும் தமிழ் மரபுத் திங்களும்.

தனியார் தமக்கு விருப்பமான வகையில் கனடியச் சட்டதிட்டங்களுக்குட்பட்டு வடிவமைத்துக் கொடுத்தால் அஞ்சல் திணைக்களம் அச்சிட்டுத் தரும்.

தனிப்பட்டவர்களால் வடிவமைக்கப்பட்ட Personalized Stamps இவை.

மொன்றியாலில் வெளியிடப்பட்டது கனடிய உள்ளூர் அஞ்சலுக்குச் செல்லுபடியானது. உரிய கட்டணத்தைச் செலுத்தி அமெரிக்க, அனைத்துலக அஞ்சலுக்கானவற்றையும் பெறலாம். பொதுவாக இத்தகைய தனிப்பட்ட அஞ்சல் தலைகளுக்கு அவற்றின் முகப்புப் பெறுமதியிலும் சற்று அதிகம் செலவாகும். குறைந்தது 30-40 அஞ்சல் தலைகளுக்கான கட்டளைகளே ஏற்றுக்கொள்ளப்படும்.

கனடிய அரசோடு இணைந்து ஒரு தனியார் அமைப்பு கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு முத்திரை வெளியிட்டது என்று ஆனந்தவிகடன் எழுதியதும் இந்த வகையே.

இந்தியாவில் இருக்கின்ற, கனடாவுக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒருவருக்குக் கனடா முத்திரை வெளியிடாது. கனடிய அரசுக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன.

அதற்காக, தமிழ்ச்சமூகம் சார்ந்த அதிகாரபூர்வ முத்திரைகள் சாத்தியமில்லை என்றில்லை.

சீனப்புத்தாண்டுக்கு கனடிய அஞ்சல் திணைக்களம் ஆண்டுதோறும் முத்திரை வெளியிடுகிறது. இந்திய அஞ்சல் துறையோடு சேர்ந்து தீபாவளிக்கும் முத்திரை வெளியிட்டிருக்கிறது கனடா.

பொங்கல் அல்லது தமிழ் மரபுத் திங்களுக்கு முத்திரைகள் சாத்தியமாகலாம். அதற்கு இன்னமும் நாம் பயணிக்கவேண்டிய தூரம் நிறைய.

அதுவரைக்கும், அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு, கட்டுக்கதைகளைப் பரப்பாதிருப்போம்.

நன்றி – கந்தசாமி கங்காதரன்