கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நகரும் IT நிறுவனங்கள்

கர்நாடகாவில் வகுப்புவாதம் காரணமாக அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் சமீபகாலமாக மத ரீதியான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஹிஜாப் பிரச்சினை கடுமையாக வெடித்து இன்னும் ஓயாத நிலையில் இந்து கோவில்களுக்கு அருகே இஸ்லாமியர்கள் கடை நடத்த தடை விதிக்கப்பட்டது.