கறிவேப்பிள்ளை போல தூக்கி வீசிவிட்டனர்: மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில், தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய உறுப்பினர்களை கறிவேப்பிள்ளையாக தூக்கியெறிந்து விட்டனர் எனக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.