கல்முனையில் சத்தியாக்கிரக போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (22) முற்பகல் 11 மணியளவில் அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில், கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.