ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே படுத்திருந்த கட்டாக்கில் மாடுகளுடன் மோதியதில் லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த 650 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்ப புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று ( 12) அதிகாலை 4.30 மணியளவில் கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.