கழிவறைகளால் விமான பயணிகள் பதற்றம்

இங்கிலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்தில், குறைந்த நீர்ப்பீத்தம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டதால் ஓடும் நீர் முற்றிலும் நின்றுபோனது.இதனால், விமான நிலையம் முழுவதும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கழிவறைகளில் தண்ணீரை வெளியேற்றும் வசதி (Flushing) மற்றும் கை கழுவும் வசதி இல்லை.குடிநீர்க் குழாய்கள் (Water fountains) செயல்படவில்லை.உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் (Cafes) காபி மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படவில்லை.