காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை, எனவே இதற்கு பாகிஸ்தானை குறை கூற வேண்டாம்.