கிழக்குமாகாணத்தில் திருகோணமலையில் தொடரும் புத்தர்சிலை முளைப்புகள்.

குச்சவெளி, கும்பிறுபிட்டி, திரியாய், புல்மோட்டை, திருகோணமலை நகரப்பகுதிகளிலும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது, தென்னமரவாடி பிரதேசத்தில் நிறுவப்படுகின்றது.

பல இடங்களில் அடாத்தாக புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றது. சில இடங்களில் வெசாக்,பொஷன் தினங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றது, பண்டிகை தினம் நிறைவடைந்து விடுகின்றது, எனினும் புத்தர் சிலைகள் நிலைகொண்டு விடுகின்றன.

ஆசாபாசங்கள், சொத்துசுகம் அனைத்தையும் விடுத்து துறவரம் பூண்ட புத்தரின் பெயரில் நில ஆக்கிரமிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள், கேட்க வேடிக்கையாக இருந்தாலும் அது எமக்கு வேதனையான விடயம். இவ்வாறான செயற்பாடுகள் சிறுபான்மை இனங்கள் மத்தியில் உள்ளக்கிழர்ச்சியினை உண்டுபன்னுகின்றன என்பதில் ஐயமேதுமில்லை.

நேற்றைய பொஷன் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பேருந்து நிலையத்தின் முன்பாக நிறுவப்பட்ட புத்தர் சிலை.