குடும்பத்தினர் முன்னிலையில் கர்ப்பிணி பொலிஸ் தலிபான்களால் படுகொலை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து நடந்து வரும் சம்பவங்களில் ஒன்றாக கோர் மாகாண தலைநகரமான பிரோஸ்கோவில் பானு நேகர் என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டவர்.

உள்ளுர் சிறைச்சாலையில் பணிபுரிந்துவந்த இந்தப்பெண் கடந்த சனிக்கிழமையன்று  கொல்லப்படும்போது எட்டு மாத கர்ப்பிணியாவார்.

பயங்கரவாதக்குழு இதுபற்றி பி.பி.சி.க்கு தெரிவிக்கையில் இந்தக்கொலையில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லையென்றும் இதுபற்றி விசாரித்து வருவதாகவும் கூறினர்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹீத் இதுபற்றி தெரிவிக்கையில் இந்த சம்பவம்பற்றி நாங்கள் கவனம் செலுத்துகிறோம். தலிபான்கள் அவரைக் கொல்லவில்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். எங்கள் விசாiணைகள் தொடர்கின்றன என்று கூறினார்.

முன்னாள் நிர்வாகத்தில் வேலைசெய்த மக்களுக்கு நாங்கள் மன்னிப்பு   அறிவித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.