ஜூலை 4 முதல் அமலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 0.55 சதவீதம் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச கட்டணம் மாறாமல் இருக்கும். எரிபொருள் விலைகள், செயல்பாட்டு செலவுகள் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, வருடாந்திர கட்டணம் சரிசெய்தல் பொறிமுறையின்படி இந்த திருத்தம் செய்யப்பட்டதாக குறித்த ஆணையம் தெரிவித்துள்ளது.