குற்றப்பிரிவில் வன்னிநாயக்க ஆஜர்

வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க, மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவில் ஆஜரானதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் புதன்கிழமை (15)  ஆஜரான பின்னர், அவரை தலா 500,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார், மேலும் மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவில் சென்று வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவிட்டார்.