கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பொதுவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கு சகல தரப்புக்கும் திறந்த அழைப்பு

சம்பள உயர்வு உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பெருந்தோட்டத் தொழிற்துறையையும் பாதுகாப்பது தொடர்பான பொவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடலுக்கு சகல தொழிற்சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தனி நபர்களுக்கும் மக்கள் தொழிலாளர் சங்கம் திறந்த அழைப்பை விடுத்துள்ளது.

அவ் அழைப்பை விடுத்துள்ள சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா  கருத்து தெரிவிக்கையில், (1). தொழிலாளர்கள் நலன் சார்ந்த புதிய கூட்டு ஒப்பந்த வரைவு (2). சம்பளம் உயர்வு திட்டம் அல்லது சூத்திரம் எவ்வாறு அமைய வேண்டும் (3). கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மாற்று என்ன? (4). தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை உள்ளடக்கிய பரந்த வெகுஜன அமைப்பின் தேவை ஆகிய விடயப்பொருள்களின் கீழ் 2018/09/01 ஆம் திகதி மு.ப. 10 மணி முதல் பி.ப. 2 மணிவரை இல. 30, புகையிரத நிலைய வீதி, ஹட்டன் என்ற முகவரியில் அமைந்துள்ள சமூக நலனுக்கான நிறுவனத்தில் (CSC) இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு அனைவருக்கும் திறந்த அழைப்பை விடுக்கின்றோம். என குறிப்பிட்டார்.

இந்நிகழ்விற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உட்பட மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் திறந்த அழைப்பு, மேலதிகமாக உத்தியோகபூர்வ அழைப்பையும் விட இருப்பதாகவும் குறிப்பிட்டதுடன் ஒரு பொது வேலைத்திட்டத்தை நோக்கி நகர வேண்டிய தேவையை உணர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் அக்கறைகொண்ட தனிநபர்கள் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.  நிகழ்வு பற்றி மேலதிக தகவல்களை அறிய 071-4302909 அல்லது 071-6275459 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்.