இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் திருமதி பிரீத்தி இனோகா ரணசிங்க, இதற்காக பத்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமி ஒருவர், பாடசாலை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதால், மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். அதன்பின்னர் தனியார் வகுப்பிலும் அந்த மாணவிக்கு மன உளைச்சல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாணவி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.