தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் ஒன்றான பிரஜா சக்தி திட்டத்தின் கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதியின் தலைவராக, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவினால், அக்டோபர் 02 ஆம் திகதி வழங்கப்பட்டது.