‘கொவிட்-19 தடுப்புமருந்து 90% பயனுள்ளது’

இதுவரையில் தாங்கள் எந்தவொரு மோசமான பாதுகாப்புப் பிரச்சினைகளையும் கண்டுபிடிக்கவில்லை என பைஸரும் அதன் ஜேர்மனியப் பங்காளருமான பையோன்டெக் எஸ்.ஈ-உம் தெரிவித்துள்ளதுடன், அவசர தேவைக்காக இந்த மாதம் ஐக்கிய அமெரிக்க அனுமதியை இம்மாதம் பெற எதிர்பார்க்கும் என்கிற நிலையில், அடுத்த மாதம் இது நடைமுறைக்கு வரலாம்.

அனுமதி வழங்கப்பட்டால் 50 மில்லியன் தடுப்புமருந்துகளை அந்நிறுவனம் இவ்வாண்டு தயாரிக்கும் என்ற நிலையில் அதன் மூலம் 25 மில்லியன் பேரை பாதுகாக்க முடியும். பின்னர் அடுத்தாண்டு 1.3 பில்லியன் தடுப்புமருந்துகளை குறித்த நிறுவனம் தயாரிக்க முடியும்.