ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு என்ன? நடந்தது என்பது தொடர்பில், “உண்மை” என்ற பதாகையின் கீழ், அரசாங்க தரபின்னர் விளக்கமளிக்கவுள்ளனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர். எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில், சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் விசாரணைக்குப் பின்னர், சந்தேகநபர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, நுககேகொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சந்தேகத்தின் பேரில் 34 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது