சகலருக்கும் பரிசோதனை?

இலங்கையிலிருக்கும் சகலருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையைத் தயாரிப்பதற்காக, பிரதிச் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அமல் ஹர்ஷ டீ சில்வா தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவொன்றையும் சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.