’சஜித்துக்கு சு.க. ஆதரவளிக்கும்’

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளை கொழும்பில் நேற்று (11) காலை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஏனைய 11 கட்சிகளுடனும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரும் எனவும் ஜனாதிபதியின் இராஜினாமா வரை காத்திருக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித், பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்  எனவும் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் இல்லாத நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் பட்சத்தில் நாடு அராஜகத்தை நோக்கி செல்லும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு காணாமல் பாராளுமன்றத்தைக் கூட்டுவதில் எவ்வித பலனுமில்லை எனவும் அதனால் இயலுமானவரை உடனடியாக தீர்வு காண்பதற்கே நாம் முயல்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சியை பொறுப்பேற்பதற்கான முதல் அழைப்பை ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதி வழங்கியமையையும் நினைவூட்டினார்.

தற்போதைய நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் இல்லாமல் நாடு இயங்க முடியாது என மேலும் தெரிவித்தார்.