சட்ட விரோத மணல் அகழ்வு; 13 படகுகளுடன் மூவர் சிக்கினர்

அத்தோடு, மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சட்டவிரோதமாக மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்ட இடத்தைப் பொலிஸார் முற்றுகையிட்ட போது, அங்கிருந்த பலர் பதறியடித்து சிதறியோடித் தலைமறைவாகியுள்ளனர்.

இதன்போது, மூவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், ஏனையவர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.