பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் துசித ஹல்லொலுவ சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.