சிங்கப்பெண்ணே…

மஹாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை வாய்ப்புத் திட்டம் !

இதில 100 நாள் வேலைத் திட்டத்துல பங்கெடுத்த 20,000 வேலூர்ப் பெண்கள்
எல்லாம் ஒண்ணா சேந்து –
வத்திக் காஞ்சு போன 14 கிமீ நீள
நாக நதி ஆத்தை தூர் வார்றதா
முடிவு பண்ணி களத்துல எறங்கினாங்க.

நாலு வருஷப் போராட்டம் …..

வழி நெடுக கெணறாத் தோண்டினாங்க.
எவ்ளோ கெணறு தெரியுமா? 300 கெணறுங்க. ஒவ்வொண்ணும் 20 அடி ஆழம். 5 அடி அகலம். பெறகு ஆத்துக்கு குறுக்கால
349 தடுப்பணைங்களைக் கட்டினாங்க .

இப்போ நாகநதிக்கு உசிரு வந்திருச்சு.
ஆத்துல தண்ணி ஓட ஆரம்பிச்சிருக்கு.

அதுவுமில்லாம மழ வந்து தண்ணி தேங்கி நின்னதால இப்போ சுத்துப்பட்டு
60 கிராமங்கள்ல நிலத்தடி நீர் மட்டம்
பெரிய அளவுக்கு ஒசந்திருக்குங்கறது ரெண்டாவது சந்தோஷமான சேதி. நாலடிலேர்ந்து ஏழடி வரைக்கும் நிலத்தடிநீர் மட்டம் ஒசந்திருக்காம்.

நிலத்தடி நீர் கெடைக்கிறதால
கொடத்தையும் பானையையும் தூக்கிட்டு பொம்பளைங்க பல கிலோமீட்டர் நடக்கறது மாறி, வீட்டுப்பக்கமிருக்கிற குழாயிலேயே தண்ணி வர ஆரம்பிச்சிருக்கு.

விவசாயமும் – கொள்ளு கேழ்வரகு விதைப்பிலிருந்து – மஞ்சள், வாழை, மக்காச்சோளம்னு பரவலாயிருக்கு. ஒருபோகத்துக்கே வானத்த அண்ணாந்து பாத்த விவசாயிங்க இப்போ ரெண்டுபோகம் அறுவடை செய்யறாங்க.

இனிமே மழ வந்தா ஆத்துல 1000 மில்லிலிட்டர் மழத்தண்ணி தேங்கி நிக்கும்னு ஆபிசருங்கெல்லாம் பேட்டி குடுத்துட்டிருக்காங்க.

“ஜல்லிக்கல்லுங்கள சொமந்து, அவ்ளோ கனமான சிமெண்ட் வளையங்களையெல்லாம் பாடுபட்டு இறக்கி, கெணறு கெணறாத் தோண்டினோம்ங்க. எல்லாருக்கும் கைகாலெல்லாம் காயம். ரத்தம். இப்போ ரெண்டு கையால ஊத்துத்தண்ணிய அள்ளியள்ளிக் குடிக்கும்போது கண்ணெல்லாம் நெறஞ்சு போகுதுங்க…”

–அப்படின்னு சொல்ற பெண்களோட ஆனந்தக்கண்ணீருக்குப் பின்னால ஏறத்தாழ
60 கிராமங்களோட வாழ்க்கை புன்னகைக்க ஆரம்பிச்சிருக்குங்க .

போட்றா நம்ப ரஹ்மான் பாட்ட !

சிங்கப்பெண்ணே…
சிங்கப்பெண்ணேய்…..
ஆணினமே உன்னை வணங்குமே!