’சிங்கள மக்களுக்கு எதிரான பேரணியல்ல’

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ.சுமேந்திரன் தெரிவித்தார். திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இருந்து, இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவணியில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.