சிறுவனை தள்ளி கொன்றவருக்கு மரண தண்டனை

ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் (ஆட்டோவில்) இருந்து 16 வயது சிறுவனை தள்ளிக் கொன்றார் என அதி குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நபரை, குற்றவாளியாக இனங்கண்ட ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தது. ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்வீஸ், இந்த தீர்ப்பளித்தார்.