நிலவும் அடைமழையுடனான வானிலையால் நாட்டின் 21 மாவட்டங்களில் 2,249 குடும்பங்களை சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.