சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியது

இந்த ஆண்டு இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரை மொத்தம் 1,341,953 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது.