சூர்யா

நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்ட (RNK & R.Mutharasan at Preview show ) படங்களில் சூர்யாவின் தன்னடக்கத்தை பார்த்து பார்த்து “இப்படி ஒரு பிள்ளையை பெறுவதற்கு அவர் (சிவமைந்தன்- சிவகுமார்) என்ன தவம் செய்தாரோ என்று எண்ணி எண்ணி பார்க்கிறேன்… வேறு எந்த நடிகர் பற்றியும் நான் கிஞ்சித்தும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை….

இதற்கு முன்பும் சூர்யா ஜோதிகா திருமணத்தை வாழ்த்தி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.

அது இதோ:

சில்லென ஒரு காதல்

***************************

சில்லென ஒரு

காதல் கேட்டு/….

சிலிர்த் ததென்

உடம்பு; ஆகா/…

சிலருக்கு மட்டும்

காதல் கைவசமாகும்/…

சிலை யழகை

மிஞ்சும் கன்னியரோடு/….

சிவமைந்தன் சூர்யாவும்

ஜோதிகாவும் இன்று/… தவமிருந்து பெற்ற

ஒப்புதலால் இங்கே/…

புவியிலுளோர் யாவரும்

போற்றுகின்ற நிலை/… அவையில் அன்று கண்டோமே/…

தில்லை யாடும்

ராசனைப் போல்/…

முல்லை மலரொத்த

மவராசன் மகன்/…

எல்லை யில்லா

மகிழ்ச்சி தந்தான்/…

இல்லை யொரு

குறையென வாழ்கவே/…

வெள்ளித் திரையிலொரு

விடி வெள்ளியாய்/…………………………. அள்ளித் தரும்……..

அமுத சுரபியாய்/…

துள்ளித் திரிந்திடு

புள்ளி மானாய்/…

தெள்ளிய சுனைநீராய்

இனித்தேயிருப்பாய்/….

(அள்ளித் தரும் அமுத

சுரபியாய் அல்லவோ

இன்று அவர் திகழ்கிறார்)