சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதானது;

உலகிற்கே வழிகாட்டும் முதன்மையான மாநிலமாக தமிழகம் சிறக்க வேண்டும் எனும் பெருங்கனவுகளோடு மக்கள் நீதி மய்யத்தை தொடக்கி வெற்றிகரமாக மூன்றாண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.

மக்களவைத் தேர்தலில் சின்னம் கிடைத்த இருபதே நாள்களில் கட்சி பெற்ற வாக்குகள் அனைவரையும் விழிவிரியச் செய்த சாதனை. இன்று விரிவுபடுத்தப்பட்ட கட்டமைப்புடன், அற்புதமான செயல் திட்டங்களுடன், பிரமாண்டமான மக்கள் செல்வாக்குடன் தமிழகத்திலும், புதுவையிலும் முதல்முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் களம் காண இருக்கிறோம் .