சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை

காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது நிறுவன தின விழா டில்லியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்துவரும் சோனியா காந்தி இவ்விழாவிலும் பங்கேற்கவில்லை.

ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் அவராலும் பங்கேற்க இயலவில்லை. விழாவில் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா வதேரா, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் ராகுல் காந்தி பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பிரியங்கா பதிலளிக்கவில்லை. தனிப்பட்ட பயணமாக ராகுல் ஞாயிற்றுக்கிழமை வெளிநாடு சென்றுள்ளார்.

அவர் எங்கு சென்றுள்ளார் என கட்சி தெரிவிக்கவில்லை. அவர் இத்தாலி சென்றுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.