ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு

புதுடெல்லி: வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில், வைஷ்ணவி தேவி கோயில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் 34 ஆகும்.