யுத்தநிறுத்ததுக்குப் பதிலாக டொன்பாஸ் பிராந்தியத்தை விட்டுக் கொடுக்கும் எந்த ரஷ்ய முன்மொழிவையும் உக்ரேன் மறுக்குமென அந்நாட்டு ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறுகிய நேரத்தில் கிழக்கு உக்ரேன் நகரான டொப்ரோபிலியாக்கருகே ரஷ்யப் படைகள் 10 கிலோ மீற்றர் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.