தனக்குத்தானே பொதுமன்னிப்பளிக்கிறாரா ட்ரம்ப்?

தனது ஆலோசகர்களுடன் தனக்குத்தானே பொதுமன்னிப்பளிப்பது குறித்து தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி ட்ரம்ப் விவாதித்ததாக வெள்ளை மாளிகை ஆலோசகர்கள் தெரிவித்திருந்தனர். எவ்வாறெனினும், அவரை குற்றமுடையவராக மாற்றும் என்பதால் இவ்வாறு செய்வதற்கெதிராக சில நிர்வாக அதிகாரிகள் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு முற்கூட்டியே பொதுமன்னிப்பு வழங்குவதையும் ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிடவில்லை என மேற்குறித்த தகவல்மூலம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்தும் ஆலோசகர்களுடன் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி ட்ரம்ப் ஆராய்ந்திருந்தார்.