தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி !

இந்த கடிதத்துடன் டெல்லி வந்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாராளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக குழுத் தலைவர் டி.ஆர். பாலுவுடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசாங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து ஒரு வாரத்தில் மத்திய அரசாங்கம் பதில் தரும் என்று அமைச்சர் கூறினார்,” என்று தெரிவித்தார்.