தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களிற்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று காலை இடம்பெற்றது.