தரகராக செயல்பட்ட இஷாரா

பாதாள உலக குழுவின் தலைவனான ‘கெஹெல்பத்தர பத்மே’ போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை, ‘கம்பஹா ஒஸ்மன்’ என்பவரின் ஊடாக வெள்ளைப் பணமாக (நித்தியானுகூலமான பணம்) மாற்றியமைத்த சட்டவிரோத நெட்வொர்க்கின் பிரதான பெண் ஏஜென்ட்டாக, தற்போது தடுப்புக்காவலில் உள்ள ‘இஷாரா செவ்வந்தி’ செயற்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.