’திட்டமிட்ட காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யவும்’

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு  அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.