திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் ஏப்.1-ம் தேதி முதல் தீவிர பிரச்சாரம்

சுற்றுப்பயண விவரம்

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி ஏப்ரல் 7-ம் தேதி திருப்பூரி லும், 8-ம் தேதி கோவையிலும் பிரச்சாரம் செய்கிறார்.

கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி., ஏப்ரல் 9-ம் தேதி சென்னை, 10-ம் தேதி விழுப்புரம், சிதம்பரம், 11-ம் தேதி நாகை, 12-ம் தேதி திருவாரூர், 13-ம் தேதி தூத்துக்குடி, 14-ம் தேதி கரூர், ஈரோடு, 15-ம் தேதி திருப்பூர், 16-ம் தேதி கோவையில் பிரச்சாரம் செய்கிறார்.

கட்சியின் மூத்த தலைவரும் தேசியக் குழு உறுப்பினருமான ஆர்.நல்லகண்ணு, ஏப்ரல் 10-ம் தேதி விழுப்புரம், 11-ம் தேதி சிதம்பரம், 12-ம் தேதி நாகை, 13-ம் தேதி மதுரை, 14-ம் தேதி தூத்துக்குடி, 15-ம் தேதி திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஏப்ரல் 1-ம் தேதி தென் சென்னை, 7-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர், 10, 11 தேதிகளில் நாகை, 13-ம் தேதி திருப்பூர், 14-ம் தேதி மதுரை, 15-ம் தேதி வட சென்னை, 16-ம் தேதி மத்திய சென்னையில் பிரச்சாரம் செய்கிறார்.

கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் ஏப்ரல் 5, 6 தேதிகளில் கிருஷ்ணகிரி, 7-ம் தேதி ஈரோடு, 8-ம் தேதி திருப்பூர், 9-ம் தேதி மதுரை, 10-ம் தேதி விருதுநகர், 11-ம் தேதி தஞ்சை, 12, 13 தேதிகளில் நாகை, 14-ம் தேதி சென்னை, 15-ம் தேதி பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.